Select Location
All Locations
State
Region
City / District
பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர்: வேட்பாளரை மாற்றியது பா.ஜ.க.

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர்: வேட்பாளரை மாற்றியது பா.ஜ.க.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான நிதின் நபின் பீகாரின் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பங்கிபூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பீகாரின் பங்கிப்பூர் இடைத்தேர்தல் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது

பங்கிப்பூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக அபிஷேக் குமார் சின்ஹா அறிவிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே, பிரபல தேர்தல் நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் பங்கிப்பூரில் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், பங்கிப்பூரில் பா.ஜ.க. வேட்பாளர் மாற்றப்பட்டு, நீரஜ்குமார் சின்ஹா புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் மாற்றம் குறித்து அறிந்த ஜன் சுராஜ் கட்சி, பிரசாந்த் கிஷோருக்கு பயந்து வேட்பாளரை மாற்றிவிட்டது பா.ஜ.க என சாடியுள்ளது. பீகாரின் பங்கிப்பூர் தொகுதியுடன், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஒரு தொகுதிக்கும் ஜூலை 30 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


Malaimalar 1 hour ago
Home Flash News