நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்: காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் நெருக்கமான மற்றும் நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் . மும்பையைச் சேர்ந்த நடிகையான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமா பெரிய வெளிச்சத்தைத் தந்தது. முக்கியமான முதல்வர் விஜய்யுடன் நடித்த துப்பாக்கி திரைப்படம் மிக அழகான மார்டன் நடிகை என்கிற பெயரைப் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
மேலும், ஜில்லா, மெர்சல் என ஹார்டிக் வெற்றியைக் கொடுத்தார். கடைசியாக தமிழில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். ஆனாலும், உடலைப் பேணுவதால் நாயகிக்கான தோற்றத்திலேயே இருக்கிறார். தற்போது, தி இந்தியா ஸ்டோரி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை காஜல் அகர்வால், “திரைப்படங்களில் நமக்கான எல்லைகளை நாம்தான் வகுத்துக்கொள்ள வேண்டும். நான் எப்போதோ நெருக்கமான மற்றும் நீச்சல் உடைக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என முடிவு எடுத்துவிட்டேன். அது சார்ந்த காட்சிகள் இருந்தால் இயக்குநர், தயாரிப்பாளிடம் முடியாது எனக் கூறிவிடுவேன். அது எவ்வளவு நல்ல திரைப்படமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, எனக்குக் கவலையில்லை” எனத் தெரிவித்துள்ளார்