Select Location
All Locations
State
Region
City / District
பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகம் இன்று திறப்பு: புகார்களை தெரிவிக்க பிரத்யேக செயலியும் அறிமுகம்

பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகம் இன்று திறப்பு: புகார்களை தெரிவிக்க பிரத்யேக செயலியும் அறிமுகம்

சென்னை: முதல்​வர் விஜய் தனது பெரம்​பூர் எம்​எல்ஏ அலு​வல​கத்தை இன்று திறந்து வைத்​து, பொது​மக்​களுக்கு புதிய குடும்ப அட்டை மற்​றும் பட்​டாக்​களை வழங்​கு​கிறார். மேலும், தொகுதி சார்ந்த புகார்​களை தெரிவிக்க பிரத்​யேக செயலி ஒன்​றும் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக தலை​வர் விஜய் பெரம்பூர் மற்​றும் திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிட்​டு, இரண்​டிலும் வெற்றி வாகை சூடி​னார். இதையடுத்​து, முதல்​வ​ராக பொறுப்​பேற்ற பின்​னர், திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜினமா செய்​தார்.

இந்​நிலை​யில், தனது சொந்த தொகு​தி​யான பெரம்​பூர் தொகுதி மக்​களின் நீண்ட நாள் கோரிக்​கைகளை நிறைவேற்​றும் வகை​யிலும், அரசு சேவை​களை எளி​தாக்​கும் வகை​யிலும், பல்​வேறு திட்​டங்​களை தொடங்கி வைப்​ப​தற்​காக முதல்​முறை​யாக பெரம்​பூருக்கு முதல்​வர் விஜய் இன்று (13-ம் தேதி) மாலை 3 மணிக்கு செல்​கிறார். அப்​போது, தனது புதிய எம்​எல்ஏ அலு​வல​கத்தை திறந்து வைத்து மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரு​கிறார். மேலும், இந்த விழா​வின் மிக முக்​கிய அம்​ச​மாக தொகுதி மக்​களுக்​குப் பல்​வேறு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்பட உள்​ளன.

குறிப்​பாக, தகு​தி​யுள்ள பயனாளி​களுக்​குப் புதிய குடும்ப அட்​டைகள் மற்​றும் இலவச வீட்​டுமனைப் பட்​டாக்​களை முதலமைச்​சர் வழங்​கு​கிறார். இது அப்​பகுதி எளிய மக்​களின் வாழ்​வா​தார மேம்​பாட்​டிற்​குப் பெரிதும் உதவும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தொழில்​நுட்​பத்தை மக்​கள் சேவை​யில் புகுத்​தும் ஒரு முக்​கிய முயற்​சி​யாக, ‘மக்​கள் சேவை தளம்’ என்ற புதிய மொபைல் செயலி இவ்​விழா​வில் முதல்வர் அறி​முகப்​படுத்​துகிறார்.

இச்​செயலி​யின் மூலம், பொது​மக்​கள்தங்​களின் அடிப்​படைத் தேவை​களான குடிநீர், சாலை, மின்​சா​ரம் போன்ற குறை​களை நேரடி​யாகப்பதிவு செய்​ய​லாம். மேலும், அரசின் நலத்​திட்​டங்​கள் மற்​றும் அதன் தகு​தி​கள் குறித்த விவரங்​களை மக்​கள் எளி​தில் அறிந்​துக் கொள்​ள​வும், தங்​களின் புகார்​களின் தற்​போதைய நிலையை போன் மூல​மாகவே கண்​காணித்​துக் கொள்​ள​வும் இந்​தச் செயலி வழி​வகை செய்​கிறது.

முதலமைச்​சரின் வரு​கையை முன்​னிட்​டு, பெரம்​பூர் தொகுதி முழு​வதும் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. பொது​மக்​கள் வசதிக்​காக பிரம்மாண்ட பந்​தல் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதி மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள முக்​கிய சாலைகளில் பலத்த போலீஸ் பாது​காப்​பும், போக்​கு​வரத்து மாற்​றங்​களும் செய்​யப்​பட்​டுள்​ளன. தனது சொந்த தொகுதி மக்​கள் மீது கொண்​டுள்ள அக்​கறையை வெளிப்​படுத்​தும் வித​மாக அமைய​வுள்ள இந்த விழா, பெரம்​பூர் தொகுதி வரலாற்​றில் ஒரு முக்​கிய நிகழ்​வாகப் பார்க்​கப்​படுகிறது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News