Select Location
All Locations
State
Region
City / District
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறையில் சுமார் ரூ. 3.23 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3-ஆம் தேதியே அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்ததால் அப்போது ஆஜராகவில்லை.

அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகியுள்ளார். தற்போது அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News