Select Location
All Locations
State
Region
City / District
சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுக கட்சி பதவியில் இருந்து நீக்கம்

சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுக கட்சி பதவியில் இருந்து நீக்கம்

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது

கடந்த 9-ம் தேதி நடந்த விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு, மறியல் போராட்டம் நடந்தது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சி பொறுப்பிலுருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விழுப்புரம் மாவட்ட கழக இணை செயலாளராக இருந்த ஆனந்தி, மாவட்ட பொருளாளராக இருந்த கே.வி.என்.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ள ஜெயபிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் எழில்ராஜ், வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் என்ற கிருஷ்ணன், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், திண்டிவனம் நகர செயலாளர் ரூபன்ராஜ், மயிலம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News