தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்க தடை
தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கையில், “கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம். ஏனெனில் அவை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்” என தமிழக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. recommended by
முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவனச்சிதறல் உண்டாகலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்திருக்கிறது. இதற்கு மாற்றாக பாரம்பரியமாக தயாரிக்கப்படும் உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதோடு, நிற மூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.