Select Location
All Locations
State
Region
City / District
ஆந்திராவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ஆந்திராவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன், சிகிச்சையில் இருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 12 பேரில் கடப்பாவைச் சேர்ந்த 8 பேர், குண்டூரைச் சேர்ந்த 2 பேர், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். 

இவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொற்று வேகமாகப் பரவும் அபாயம் இல்லை. தற்போதைய நிலையில், 3 பேர் வீட்டு தனிமைப்படுத்தலிலும், 2 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், புதிய வகை வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிய 5 மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் நாடு முழுவதும் 339 பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஆந்திர அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பீதியைக் தவிர்த்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Dinakaran 1 hour ago
Home Flash News