Select Location
All Locations
State
Region
City / District
ஜூலை 20 போராட்டம் டிரைலர்தான்; எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால்...! சிஜேபி எச்சரிக்கை

ஜூலை 20 போராட்டம் டிரைலர்தான்; எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால்...! சிஜேபி எச்சரிக்கை

தில்லியில் ஜூலை 20-ஆம் தேதி நடந்த போராட்டம் ஒரு டிரைலர்தான் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார். நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா செய்தியாளர்களுடன் பேசுகையில், "இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் இதுதான் மிகப்பெரிய இயக்கம். கடந்த ஜூலை 20-ஆம் தேதி தில்லியில் நடந்த போராட்டம் ஒரு டிரைலர்தான். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இன்னும் லட்சக்கணக்கானோர் தில்லிக்கு வருவார்கள். இந்த முறை நாங்கள் பின்வாங்கவோ, அமைதியாக இருக்கவோ மாட்டோம். அரசு தனது போக்கைச் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இளைஞர்கள் இந்த அரசை வீழ்த்திவிடுவார்கள். நாங்கள் அமைதியாகவே போராட்டம் நடத்துகிறோம். கடந்த 20 ஆம் தேதியும் அமைதியான முறையிலேயே பேரணியில் ஈடுபட்டோம். ஆனால் காவல்துறை வன்முறையைக் கையாண்டது, அந்த இடங்களில் மட்டுமே குழப்பம் ஏற்பட்டது.

காந்தி, அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுவதால்தான் இளைஞர்கள் இங்கு 31 நாள்களாக அமைதியாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகள் குறித்து குறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பேசியுள்ளார். எந்தவொரு இளைஞர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அது உறுதி செய்யப்படாமல் இந்தப் போராட்டம் முடிவுக்கு வராது. எங்கள் குழுவின் தலைமையை பொறுத்தவரை, நாங்கள் எந்த வழக்குப்பதிவுக்கும் அஞ்சவில்லை; சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட தயாராக இருக்கிறோம். எங்கள் போராட்டத்திற்காகச் சிறைக்குச் செல்வது ஒரு சிறிய தியாகமே. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, ஏன் பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில் இது ஒரு மிகப்பெரிய இயக்கம். எங்கள் கோரிக்கை நியாயமானது. இந்த போராட்டத்திற்கு அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.


Dinamani 2 hours ago
Home Flash News