மருந்து இறக்குமதிக்கு 200% வரி: டிரம்ப்..!!
அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு ஆலைகளை அமெரிக்காவிலேயே அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும். அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் ஆகஸ்ட் 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 0% வரி தொடர்ந்து விதிக்கப்படும். அதன் பிறகு ஒரு வருடத்திற்கு வரி விகிதம் 100% ஆகவும், அதன்பிறகு 200% ஆகவும் உயர்த்தப்படும்.
ஜெனரிக் மருந்து உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதற்காக இது செய்யப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குள் ஆலை அமைக்க தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கையின் நோக்கம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதாகும். காப்புரிமை மற்றும் பிராண்டட் மருந்துகளுக்கான வரிவிதிப்பு மாற்றமின்றி தொடரும். அமெரிக்கா முழுவதும், இதுவரை கண்டிராத அளவில் மருந்து உற்பத்தி வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்