"மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும்!" –அபிஜீத் திப்கே அறிவிப்பு
டெல்லி: மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும் என அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தல், கடந்த 20ம் தேதி டெல்லியில் நடந்த ‘சலோ சன்சாத்’ பேரணியில் அமைதியாக பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகளை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வலியுறுத்தி வந்தது.
பிரதான் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என சி.ஜே.பி. தெரிவித்திருந்தது. இதனிடையே இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி விலகுவதாக பிரதான் அறிவித்துள்ளார். மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும் என அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து இருந்தாலும், எங்களின் மேலும் 2 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி நிவாரணம், மாணவர்கள் மீது அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று CJP நிறுவனர் அபிஜீத் திப்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.