காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
31 வயதாகும் மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ என மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார். இதற்கு முன்பாக கடந்த இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, தொடர்ச்சியாக மூன்றாவது தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.