ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட வங்கதேச அணியை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக வழிநடத்துகிறார். மெஹிதி ஹாசன் மிராஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹாசன் மிராஸ் (துணைக் கேப்டன்), சௌமியா சர்க்கார், ஷாத்மன் இஸ்லாம், தன்சித் ஹாசன் தமிம், மோமினுல் ஹேக், முஷ்பிகர் ரஹீம், அமித் ஹாசன், ஜேக்கர் அலி, தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, ஹாசன் மஹ்முத், சையத் அகமது, ஹொசைன் சௌதரி, முஷ்பிக் ஹாசன்.