Select Location
All Locations
State
Region
City / District
தமிழக பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்

தமிழக பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்

சென்னை: நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார். தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று சில கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், புதிய முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார். புதி​தாக பொறுப்​பேற்ற தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது. இந்​நிலை​யில் நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை தாக்​கல் செய்​வதற்​காகச் சட்​டப்​பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடியது. அதன்​படி காலை 10 மணிக்கு, பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்தார். தொடர்ந்து அவர் தமிழக அரசை, தமிழக முதல்வரை பாராட்டிப் பேசினார். உண்மையான சமூகநீதி கொண்ட ஆட்சியை விஜய்யின் தவெக அரசு நல்கிவருவதாகக் கூறினார்.

ரூ.10 லட்சம் கடன் உள்ள இக்கட்டான சூழலில், மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது என்றார். டெண்டர் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு: திருநர் நலன்: மாற்று பாலினத்தவருக்காக திறன் பயிற்சி , சுயதொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். 5 மாவட்டங்களில் 'அரண்' தங்குமிடங்கள் அமைக்கப்படும். ரூ.50,000 வரை சுயதொழில் வங்கிக் கடனுக்கு மானியம் வழங்கப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் நூலகம், யோகா, தியானம் , உள்ளரங்க விளையாட்டு வசதிகள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும் அங்கன்வாடி மேம்பாடு: 500 சிதிலமடைந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் உறுதி செய்யும் முயற்சிகள் எடுக்கப்படும். பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதிகள் உறுதி செய்யப்படும்.

> 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 

> 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கட்டண உதவி வழங்கப்படும். 

> மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். மொத்தமாக ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

> சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தொடரும். 

> ஹஜ் பயண மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு. 

> கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு. 

> கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்ட மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு. 

> 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

> மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு அண்ணனின் சீர்: பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

> பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு .

> சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

> ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்: பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், வாழ்வாதாரத் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள், பள்ளி மற்றும் விடுதி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தப்பட ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

> அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் கீழ் உட்கட்டமைப்பு மேம்பாடு. ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரம் உயர்வை உறுதி செய்ய ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்.

இதற்காக ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

> அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்த ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முன்னவுத் திறனை ஊக்குவிக்கும் திட்டம். இதன்மூலம் மூலதண மானியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்க ஆதரவு அளிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. 

> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யவும் ‘வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்த தமிழ்நாடு 2026- 27 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News