Select Location
All Locations
State
Region
City / District
TN Budget 2026

TN Budget 2026: துறை ரீதியான நிதி ஒதுக்கீடுகளும் மாநில கடன், வருவாய் விவரங்களும்! | Budget Highlights

தமிழ்நாட்டின் 2026-27 பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தவெக தேர்தல் வாக்குறுதிகளில் எவை இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக பட்ஜெட் தொடர்பான செய்திகளின் தொகுப்பு...!

``மாநிலத்தின் நிதிநிலை நிலையில்லாமல் உள்ளது. கடன் சுமையால் நிரம்பியும், குறைந்தபட்ச வருமானத்துடனும் உள்ளது. கசியும் ஓட்டைகளுடன் கூடிய கஜானா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி தொடங்கிவிட்டது. ஆனாலும், நிதி நிர்வாகத்தை Fiscal Consolidation பாதைக்கு கொண்டு வர குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

கடன்களைப் பெறுதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான மதிப்பீடுகள், இந்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில் இறுதிசெய்யப்பட்டுள்ளன. பொதுக்கடன்களை பொறுத்தமட்டில் இவ்வரசு 2026-27, மொத்தம் 1,73,445 கோடி ரூபாய் கடன் பெறவும், 51,971 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2026-27ல் 55,775 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட வரி நிர்வாகம் மற்றும் வசூல் திறன் உள்ளிட்ட வருவாய் பெருக்க நடவடிக்கைகளின் விளைவாக, இது 2027-28ல் 53,933 கோடி ரூபாயாகவும், 2028-29ல் 51,058 கோடி ரூபாயாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது: இதன்மூலம் மாநிலத்தில் மூலதனச் செலவினத்திற்குக் கூடுதல் இடம் உருவாகும். " என மரிய வில்சன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.


Nakkeeran 1 day ago
Home Flash News