Select Location
All Locations
State
Region
City / District
டிரம்புக்கு புதிய தலைவலி:

டிரம்புக்கு புதிய தலைவலி: டெமாக்ரடிக் கட்சியை உலுக்கிய புதுமுகம்; அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டர்?

முன்னாள் பொது சுகாதார அதிகாரி ஒருவர் ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் தீவிரப் பிளவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். அரசியலுக்குப் புதியவரும், முன்னாள் பொது சுகாதார அதிகாரியுமான அப்துல் எல்-சையத், மிச்சிகன் மாகாணத்தின் டெமாக்ரடிக் செனட் முதன்மைத் தேர்தலில் (Democratic Senate primary) வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் விரைவில் இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் இவர் ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் தீவிரப் பிளவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

எகிப்திய புலம்பெயர்ந்தோரின் மகனான 41 வயதான அப்துல், செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரே அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராக உருவெடுப்பார். மிச்சிகனின் ஆன் ஆர்பர் (Ann Arbour) பகுதியைச் சேர்ந்த அப்துல், நான்கு முறை அமெரிக்க மக்கள் பிரதிநிதியாக இருந்த ஹேலி ஸ்டீவன்ஸை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அப்துல் இப்போது குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், டிரம்ப் ஆதரவளிப்பவருமான மைக் ரோஜர்ஸை எதிர்த்துப் போட்டியிடுகிறார். முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அப்துல் தனது முதல் உரையில், "நாளை முதல் நாம் பிளவுகளைச் சரிசெய்யத் தொடங்குவோம்" என்று கூறினார்.

அனைவருக்குமான இலவச மருத்துவம், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் அமலாக்கப் பிரிவை (ICE) கலைத்தல் மற்றும் இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற அமெரிக்க ராணுவ உதவியை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அப்துல் இடதுசாரிகளின் ஆதரவைப் பெற முடிந்தது. நியூயார்க் டைம்ஸ் தகவலின்படி, வெர்மான்ட் செனட்டர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் பிற இடதுசாரி தலைவர்களின் ஆதரவை அவர் பெற்றுள்ளார்.


Indian Express Tamil 1 hour ago
Home Flash News