கண்ணாடியைத் திருப்பினால் எப்படி சார் வண்டி ஓடும்? தவெக அரசுக்கு அதிமுக ஐடி விங் கேள்வி!
சென்னை: தவெக அரசு நடத்தும் எம்பிக்கள் கூட்டத்தை விமர்சித்து அதிமுக ஐடி விங் பதிவு வெளியிட்டுள்ளது. தவெக அரசு நடத்தும் மடைமாற்ற அரசியலுக்கு அதிமுக துணைபோகாது என்று கூறியுள்ள அக்கட்சி, கண்ணாடியைத் திருப்பினால் எப்படி சார் வண்டி ஓடும்? என சினிமா வசனத்தைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது. மேலும், எதற்காகத் தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்பிக்கள் கூட்டம் எனும் நாடகத்தை அரங்கேற்றுகிறார்? என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.