Select Location
All Locations
State
Region
City / District
மும்பையில் அமேசான், ஐ.ஐ.டி உணவு லைசென்ஸ் ரத்து:

மும்பையில் அமேசான், ஐ.ஐ.டி உணவு லைசென்ஸ் ரத்து: `கொசுவை வாளால் கொல்லாதீர்கள்' - ஐகோர்ட் விமர்சனம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள உணவகங்கள், பால் பண்ணைகள் கலக்கத்தில் இருக்கின்றன. அமேசான் காலாவதியான உணவுப் பொருள்களை அறிவியல் பூர்வமாக அகற்றுவதற்குப் பதிலாக, அதன் ஒப்புதல் இல்லாமல் ஒரு ஏஜென்சி மூலம் அப்புறப்படுத்தியதாக கூறி அமேசான் நிறுவனத்தின் குடோன் லைசென்ஸை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

மும்பை அருகில் உள்ள பிவாண்டி என்ற இடத்தில் அமேசான் குடோன் இருக்கிறது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அமேசான் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


Vikatan 56 minutes ago
Home Flash News