வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க ஆக.15-க்குள் eKYC செய்வது கட்டாயம்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
டெல்லி: வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க, வரும் ஆகஸ்ட் 15-க்குள் eKYC செய்வது கட்டாயம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. எரிவாயு இணைப்புதாரர் நேரில் சென்று நுகர்வோர் புத்தகம் மற்றும் அடையாள ஆவணங்களுடன் இதனைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில், eKYC செய்யும் வரை மானிய விலை சிலிண்டர் கிடைக்காது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.