Select Location
All Locations
State
Region
City / District
 இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!

பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!

பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்து துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும், பொறியியல் பொதுக் கலந்தாய்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் ஆக. 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு செப். 3 ஆம் தேதி முதல் செப். 7 ஆம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்ப இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பிளஸ் -2 துணைத்தோ்வில் தோ்ச்சி அடைந்த மாணவா்கள் மற்றும் பொதுக்கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்களுக்குக்காண விண்ணப்பங்கள் 17.8.2026 முதல் 31.8.2026 வரை பெறப்படும். இவா்களுக்கான துணைக்கலந்தாய்வு 3.9.2026 முதல் 7.9.2026 வரை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது விருப்பப் பட்டியலில் எத்தனை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு விருப்பங்கள் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அதனை கையாளும் வகையில் திறன்மிகுந்த மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட மென்பொருள் வடிவமைத்து செயலாக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின் tndote@tndote.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு குறித்த விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். மேலும் விவரங்கள் மற்றும் அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 1800-425-0110 என்ற தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டாணை பற்றிய விளக்கங்களை தெரிந்துகொள்ளலாம்.


Dinamani 1 hour ago
Home Flash News