விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக்! நடிகை தபு கதாபாத்திர அறிமுக விடியோ வெளியீடு!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஸ்லம் டாக் படத்தின் நடிகை தபு கதாபாத்திர அறிமுக விடியோ இன்று வெளியானது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட்.
ஆக்ஷன் பாணி கதைக்களம் கொண்ட இப்படத்தில் தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகை தபு-வின் கதாபாத்திர அறிமுக விடியோ இன்று வெளியானது. கௌரி ஹெக்டே என்கிற காவல்துறை அதிகாரியாக மிரட்டலான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.