Select Location
All Locations
State
Region
City / District
அவையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லையா.!! அமித்ஷாவிற்கு ராகுல் கேள்வி...

அவையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லையா.!! அமித்ஷாவிற்கு ராகுல் கேள்வி...

டெல்லி: மாணவர் போராட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்க தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷாவின் உரையை கேட்பதில் விருப்பமில்லை என்றும், போராட்டக்காரர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது ஏன் என்பதற்கான பதில்களே தேவை என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்பதற்கான பதில் விடும் வேண்டும். விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்த அழைப்பை ஏற்கவோ அல்லது தங்கள் போராட்டத்தைக் கைவிடவோ எங்களுக்கு விருப்பமில்லை.

அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வராமல் இருப்பதை பார்த்தால் அவையை எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை. ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகளால் மாணவர்களைத் தாக்க உத்தரவிட்டது யார்? எங்கள் குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா தான் உத்தரவிட்டாரா? அவர் அவ்வாறு செய்திருந்தால், அவர் பதவி விலக வேண்டும். ஒருவேளை தாக்குதலுக்கு அமித் ஷா உத்தரவிடவில்லை என்றால் என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கிறார் என்றே அர்த்தம். கடந்த 20 நாட்களாக அமித் ஷாவைக் காணவில்லை. இந்தியாவின் உள்துறை அமைச்சருக்குத் துணிச்சல் இல்லை; அவரால் அவைக்கு வர முடியவில்லை என்று கடுமையாக சாடினார்


Dinakaran 58 minutes ago
Home Flash News