மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று ஒருநாள் கன்னட அமைப்புகள் பந்த் அறிவிப்பு
ஓசூர்: மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று ஒருநாள் கன்னட அமைப்புகள் பந்த் அறிவித்துள்ளது. ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் உள்ளனர் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் மற்றும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா முழுவதும் ஒருநாள் பந்த் (முழு அடைப்பு) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த 12 மணி நேர பந்த் நடைபெறுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.