வடகொரியா ஏவுகணை சோதனை
சியோல்: வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து அடையாளம் தெரியான எறிபொருளை நேற்று ஏவியதாக தென்கொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ன சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. தென்கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை குறைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி புறக்கணித்த ஒரு நாள் கழித்து இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.