Select Location
All Locations
State
Region
City / District
LIVE
தவெகவுக்கு பெயர் வைத்தது நான்தான்! ஜோதிடர் ரத்தன் பண்டிட்

தவெகவுக்கு பெயர் வைத்தது நான்தான்! ஜோதிடர் ரத்தன் பண்டிட்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெயர் வைத்தது நான்தான் என்று அக்கட்சியின் நிர்வாகியும் முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இலட்சினை வெளியீட்டு விழாவில் ரத்தன் பண்டிட் வியாழக்கிழமை கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: “வெற்றி என்ற பெயரை நான்தான் தேர்வு செய்து கொடுத்தேன். 22 நம்பர் பெயர் இது. தோனி, கங்குலி ஆகிய பெயர்கள் எல்லாம் 22-ல்தான் வரும். வெற்றி என்றால் முருகன். அதனால்தான் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெற்றி என பெயர் வைத்தேன். தவெகவுக்கு பெயர் வைத்தது நான். 

இன்று முதல்வராக விஜய் அமர்ந்துள்ளார். வெற்றி தொலைக்காட்சியின் இலட்சினையும் (லோகோ) நான்தான் வைத்து கொடுத்தேன். விஜய்க்கு பொருந்தக்கூடிய நிறத்தில் இலட்சினையை வடிவமைத்தேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக, முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரத்தன் பண்டிட்டை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.


Dinamani 39 minutes ago
Home Flash News