போரை முடிவுக்கு கொண்டு வர தடைபட்டு நிற்கின்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிப்பதே நல்ல வழி: ஈரான் அதிபர் கருத்து
போரை முடிவுக்கு கொண்டு வர தடைபட்டு நிற்கின்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிப்பதே நல்ல வழி: ஈரான் அதிபர் கருத்து 06:36 AM Aug 24, 2026 IST featured-imgfeatured-img share Share fb twitter whatsapp துபாய்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடங்கி 6 மாதமாகி விட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கான 60 நாள் காலக்கெடு கடந்த வாரத்துடன் முடிந்து விட்டது. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தடைபட்டு நிற்கிறது. இதற்கிடையே, ஈரான் அதிபர் பெசேஷ்கியனின் உரையை அரசின் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் பெசேஷ்கியன் கூறியிருப்பதாவது: போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற தற்போதைய நிலையில் இருந்து வெளியேற வேண்டுமென்றால், அமெரிக்கா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிப்பதே சிறந்த வழி.
கண்ணியம், விவேகம், தேச நலன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மிகச்சிறந்ததாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கருதுகின்றனர்.News இந்த ஒப்பந்தத்தில் சரணடைதலைக் குறிக்கும் ஒரு விதிமுறை கூட இல்லை. எங்கள் உச்ச தலைவர் கொள்கைகளை வகுக்கிறார். நாங்கள் அந்த பாதையை பின்பற்றுகிறோம். இத்தகைய முட்டுக்கட்டை நிலவும் சூழலில் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முடியாது. மூலதனமும் பணமும் அபாயங்களுக்கு வழிவகுக்கக் கூடியவை. நாங்கள் அந்த அபாயத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்’’ என்றார்.