Select Location
All Locations
State
Region
City / District
"ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்" - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

"ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்" - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

"தமிழக அரசு விரைவில் ராசிமணலில் அணை கட்டத் தொடங்க வேண்டும்" என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ராசிமணல் பகுதியை நேரில் பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "காவிரியின் குறுக்கே ராசி மணலில் அணை கட்ட அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

2024 ல் ராசிமணல் பகுதியைப் பார்வையிட்டு மைசூரில் ஒன்றாக அமர்ந்து பேசிய கர்நாடக-தமிழக விவசாயிகள் ராசிமணலில் தமிழகம் அணை கட்டிக்கொண்டால் கர்நாடகாவிற்குத் தேவையான குடிநீரை எடுத்துக் கொள்ளலாம்.

இடது கரை காவிரி ஆறு தமிழகத்திற்கும் வலது கரை கர்நாடகாவிற்குச் சொந்தமாகிக் கொள்ளும். எனவே தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்காது என முடிவெடுத்து அன்றைய முதலமைச்சர் சித்தராமையாவிடமும் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி சென்னையில் நடந்த தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'மேகதாட்டு அணை கட்டினால் தமிழகத்திற்குத்தான் பயன் அளிக்கும்' எனக் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


Nakkeeran 51 minutes ago
Home Flash News