சூரி பிறந்த நாள்: மண்டாடி சிறப்பு போஸ்டர்!
நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு மண்டாடி திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ’மண்டாடி’. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றது.
இந்த நிலையில், நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு மண்டாடி திரைப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சூரியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படமென்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.