Select Location
All Locations
State
Region
City / District
பிரக்ஞானந்தா சாம்பியன்: கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று அசத்தல்

பிரக்ஞானந்தா சாம்பியன்: கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று அசத்தல்

சென்னை: நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்​பில் நடை​பெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்​திய கிராண்ட் மாஸ்ட​ரான பிரக்ஞானந்தா 15-13 புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்காவின் பேபியானோ கருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிளாசிக்கல் பிரிவில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். அடுத்த ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் கிளாசிக்கல் சுற்றின் முடிவில் 3-9 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் பின்தங்கினார். இதையடுத்து இருவரும் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவில் பலப்பரீட்சை மேற்கொண்டனர்.

கிளாசிக்கல் பிரிவில் பின்தங்கிய நிலையில் கருனாவை விட 6 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவில் விளையாடினார். இதில் ரேப்பிட் பிரிவில் இரண்டு ஆட்டங்களையும் பிரக்ஞானந்தா வென்றார். தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை நழுவ விட்டார் பிரக்ஞானந்தா, இறுதியில் 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்றார். முதல் இந்தியர் கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற முதல் இந்திய என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவருக்கு இரண்டு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. இதில் கருனா இரண்டாம் இடமும், வெஸ்லி மூன்றாம் இடமும் பிடித்தனர். ‘கருனாவுக்கு எதிராக ரேப்பிட் பிரிவில் பெற்ற அந்த இரண்டு வெற்றி மிகவும் முக்கியமானது’ என்று வெற்றிக்கு பிறகு பிரக்ஞானந்தா தெரிவித்தார்.


Hindu Tamil 16 minutes ago
Home Flash News