Select Location
All Locations
State
Region
City / District
கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை: கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மன உறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தாவை மனமார வாழ்த்துகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்​பில் நடை​பெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்​திய கிராண்ட் மாஸ்ட​ரான பிரக்ஞானந்தா 15-13 புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்காவின் பேபியானோ கருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


Hindu Tamil 20 minutes ago
Home Flash News