Select Location
All Locations
State
Region
City / District
தயாராகிறது ராமர் கோயில் ஆவணப் படம்: பிரதமர் மோடியின் பேட்டி, 500 வருட போராட்டம் இடம்பெறுகிறது

தயாராகிறது ராமர் கோயில் ஆவணப் படம்: பிரதமர் மோடியின் பேட்டி, 500 வருட போராட்டம் இடம்பெறுகிறது

புதுடெல்லி: ராமர் கோயிலுக்​கான 500 ஆண்​டு​காலப் போராட்​டம் மற்​றும் அதன் பிரம்​மாண்​ட​மான கட்​டு​மானப் பணி​களை விவரிக்​கும் ஆவணப்​படம் தயா​ராகி வரு​கிறது. இதை புனேவைச் சேர்ந்த நிறு​வனம் தயாரிக்​கிறது. ஆகஸ்ட் மாதத்​துக்​குள் இத்​திரைப்​படம் நிறைவடைந்​திருக்க வேண்​டும். இருப்​பினும், கோயில் அறக்​கட்​டளை​யின் இடைக்​காலப் பொதுச் செய​லா​ளர் கிருஷ்ணா மோகன், செப்​டம்​பர் 2-ம் தேதி நடை​பெறவுள்ள அறக்​கட்​டளைக் கூட்​டம் வரை இப்​பணியை நிறுத்தி வைக்​கு​மாறு நிறு​வனத்​தைக் கேட்​டுக்​கொண்​டுள்​ளார். இதற்கு ராமர் கோயி​லின் காணிக்கை திருட்டு புகார் காரணம் எனக் கருதப்​படு​கிறது.

7 அத்​தி​யா​யங்​களைக் கொண்ட இந்த ஆவணப்​படத்​தின் தயாரிப்​பாள​ரும் இயக்​குநரு​மான ஏக்​நாத் சட்​புர்​கர், எந்​த​வித ஊதி​ய​மும் இன்றி இப்​படத்தை உரு​வாக்கி வரு​கிறார். அவரும், அவரது மனைவி ஸ்வப்னா சட்​புர்​கரும் அடங்​கிய 35 பேர் கொண்ட குழு​வினர் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக இத்​திரைப்​படத்​துக்​காகப் பணி​யாற்றி வரு​கின்​றனர். தற்​போது, நினை​வுத் தூண் அமைப்​பது தொடர்​பான காட்​சிகள் மற்​றும் பிரதமர் நரேந்​திர மோடி​யின் நேர்​காணல் ஆகியவை மட்​டுமே படமாக்​கப்பட வேண்​டி​யுள்​ளன. கோயில் இயக்​கம் மற்​றும் கட்​டு​மானப் பணி​களில் ஈடு​பட்ட சுமார் 170 பேரிடம் இதற்​காக நேர்​காணல் நடத்​தப்​பட்​டுள்​ளது. அயோத்தி மற்​றும் நாட்​டின் பிற பகு​தி​களைச் சேர்ந்த, கோயில் இயக்​கத்​துடன் தொடர்​புடைய முக்​கியப் பிர​முகர்​களின் நேர்​காணல்​கள் இதில் இடம்​பெற்​றுள்​ளன. 

இதில் சாதுக்​கள், மடா​திப​தி​கள், கரசேவை​யில் ஈடு​பட்​ட​வர்​கள், ராமர் கோயிலுக்​கான இயக்​கத்​தைப் பற்றி செய்தி வெளி​யிட்ட மூத்த பத்​திரி​கை​யாளர்​கள் மற்​றும் உயர் நீதி​மன்​றம் மற்​றும் உச்ச நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் ஆகியோர் அடங்​கு​வர். அத்வானி, ஜோஷி நேர்காணல் மேலும், முன்​னாள் மத்​திய அமைச்​சர்​களான லால் கிருஷ்ணா அத்​வானி, டாக்​டர் முரளி மனோகர் ஜோஷி, மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், மத்​தி​யப் பிரதேச முன்​னாள் முதல்​வர் உமா பார​தி, சாத்வி ரிதம்​பரா மற்​றும் வினய் கட்​டி​யார்​ ஆகியோரின்​ நேர்​காணல்​களும்​ இப்​படத்​தில்​ இடம்​பெற்றுள்​ளன.


Hindu Tamil 1 hour ago
Home Flash News