Select Location
All Locations
State
Region
City / District
மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! - புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை!

மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! - புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை!

மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! - புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை!தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணையை தமிழக முதல்வர் விஜய் தற்போது திறந்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை.

இதனால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவிட்ட நிலையிலும் கர்நாடகாவில் கனமழை பெய்ததாலும் காவிரி நீர் கொஞ்சம் திறந்துவிடப்பட்டது.

இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிய நிலையில் காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார்.

பாரம்பரிய உடையில் சென்ற முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.


24 News 40 minutes ago
Home Flash News