Select Location
All Locations
State
Region
City / District
ஜிடிபி உயர்ந்தாலும் அந்நிய செலாவணி சேமிப்பை நிறுத்த கூடாது: ஸ்ரீதர் வேம்பு

ஜிடிபி உயர்ந்தாலும் அந்நிய செலாவணி சேமிப்பை நிறுத்த கூடாது: ஸ்ரீதர் வேம்பு

புதுடெல்லி: நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அடைந்​தா​லும், இந்​தியா அந்​நியச் செலா​வணி​யைச் சேமிப்​பதை நிறுத்​தி​விட முடி​யாது என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்​து, ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்​தில் பதிவிட்டுள்ளதாவது: நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்​துள்​ளது. வலு​வான மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) வளர்ச்சி ஏற்பட்டாலும், அந்​நியச் செலா​வணியை சேமிப்​பதை நிறுத்​தி​விட முடி​யாது. நமது பொருளா​தா​ரம் நன்​றாக வளர்ந்து வரு​கிறது. இருப்​பினும், எரிசக்தி மற்​றும் தொழில்​நுட்​பம் ஆகிய இரண்​டிலும் நாம் இன்​னும் இறக்​கும​தி​யைச் சார்ந்தே இருக்​கிறோம்.

ஜப்​பான், தைவான், தென் கொரியா, சீனா ஆகிய அனைத்​தும், விரை​வான மொத்த உள்​நாட்டு உற்​பத்தி வளர்ச்​சி​யை​யும், அந்நியச் செலா​வணி​யைச் சேமிக்க வேண்​டிய கட்​டா​யத்​தை​யும் கடந்து வந்​தன. மேற்​கத்​திய நாடு​களுக்கு இணை​யாக வளர்வதற்கு கிழக்கு ஆசிய நாடு​கள் எவ்​வளவு காலம் எடுத்​துக் கொண்டன என்​ப​தைப் பார்க்க வேண்​டும். அனைத்து மேம்​பட்ட தொழில்​நுட்​பங்​களி​லும் நாம் திறனை வளர்த்​துக்​கொண்​டு, நாமே தொழில்​நுட்​பத்தை உரு​வாக்​கி புதுப்பிக்​கத்​தக்க எரிசக்தி மூலம் எரிசக்​தித் துறை​யில் தற்சார்பை எட்டிய பிறகு, அந்​நியச் செலா​வணி​யைச் சேமிக்க வேண்​டிய அவசி​யம் நமக்கு இருக்​காது. எனவே​தான், வெளிநாடுகளுக்​குச் செல்​வதைத் தவிர்க்க வேண்​டும், தேவையின்றி தங்​கம் வாங்க வேண்​டாம், வெளி​நாடு​களில் திருமணங்​களை நடத்த வேண்​டாம் என்று பிரதமர் நரேந்​திர மோடி நம்மை அறிவுறுத்தி உள்​ளார். இவ்​வாறு ஸ்ரீதர்வேம்​பு தெரிவித்​துள்​ளார்​.


Hindu Tamil 49 minutes ago
Home Flash News