Select Location
All Locations
State
Region
City / District
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரைபகினா

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரைபகினா

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்​னிஸ் தொடரில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 12-வது நாளான நேற்று முன்​தினம் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறுதி ஆட்​டம் ஒன்​றில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா, 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃபுடன் மோதி​னார். இதில் முதல் செட்டை 3-6 என இழந்த ரைபகினா அடுத்த 2 செட்​களி​லும் பதிலடி கொடுத்து 6-4, 6-4 என கைப்​பற்​றி​னார். முடி​வில் 2 மணி நேரம் 9 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ரைபகினா 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு அரை இறு​தி​யில் முதல் நிலை வீராங்​க​னை​யும் நடப்பு சாம்​பியனு​மான பெலாரஸின் அரினா சபலென்​கா, 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலாவை எதிர்​கொண்​டார். இதில் தொடக்​கம் முதலே ஆதிக்​கம் செலுத்​திய அரினா சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டி​யில் கால்​ப​தித்​தார். இன்று நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் அரினா சபலென்​கா, எலெனா ரைபகி​னா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

அமெரிக்க ஓபன் டென்​னிஸ் தொடரில் ஜூனியர் பிரி​வில் மகளிர் இரட்​டையர் கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் மாயா ராஜேஷ்வரன் ரேவ​தி, உக்​ரைனின் அன்​டோனியா சுஷ்கோவா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் ரஷ்​யா​வின் ஃபெலிட்​சாட்டா டோரோஃபீவா ரைபாஸ், அனா புஷ்கரேவா ஜோடியை வீழ்த்தி அரை இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News