வங்கதேசத்தின் புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் ஓம் பிர்லா பங்கேற்கிறார்!
டெல்லி: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தேர்வான தாரிக் ரஹ்மானின் (பிப்.17) பதவியேற்பு விழாவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. அன்றைய நாள் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வரவுள்ளதால் பிரதமர் மோடியால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.