கம்மி விலையில் ஜோதிர்லிங்கம் செல்லலாம்.. IRCTC டூர் பேக்கேஜ்..செம சான்ஸ்
பாரத் கௌரவ் ரயிலில் மகாராஷ்டிரா ஜோதிர்லிங்கம் மற்றும் ஷீரடி சாய் தரிசன டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த 7 இரவுகள்/8 பகல் ஆன்மீக பயணம் மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை இயங்கும். இந்த சுற்றுலா பயண தொகுப்பில் திரிம்பகேஷ்வர், பீமாசங்கர், கிரிஷ்ணேஷ்வர் ஜோதிர்லிங்கம், ஷீரடி சாய் பாபா மற்றும் சனி ஷிங்னாபூர் ஆகிய இடங்கள் அடங்கும். இந்த பேக்கேஜில் ரயில் பயணம், ஹோட்டல், உணவு மற்றும் உள்ளூர் போக்குவரத்து ஆகியவை அடங்கும். இப்போது டூர் பேக்கேஜ் தொடர்பான முழுமையான தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் வழியாக ஷீரடி சாய் தரிசனத்துடன் மகாராஷ்டிரா ஜோதிர்லிங்க தரிசனம் உட்பட சிறப்பு ரயில்-சுற்றுலா பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த ஆன்மீக பயணம் மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை ஏழு இரவுகள் மற்றும் எட்டு பகல்கள் நீடிக்கும். இந்த யாத்திரையின் போது, பக்தர்கள் திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம், பீமாசங்கர் ஜோதிர்லிங்கம், கிருஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம், ஷீரடி சாய்பாபா கோயில், சனி ஷிங்னாபூர் கோயில் மற்றும் எல்லோரா குகைகளுக்குச் செல்ல முடியும். ஷிரடி, நாசிக், சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மற்றும் புனே ஆகியவை புனித யாத்திரையின் முக்கிய நிறுத்தங்களாகும்.
ஐஆர்சிடிசி பிராந்திய மேலாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், ஜிஎஸ்டி உட்பட ஒரு நபருக்கு எகானமி வகுப்பில் ரூ.16,495, ஸ்டாண்டர்ட் வகுப்பில் ரூ.29,915 மற்றும் கம்ஃபர்ட் வகுப்பில் ரூ.36,635 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணம், ஹோட்டல் தங்குதல், சைவ உணவு, உள்ளூர் போக்குவரத்தில் சுற்றிப் பார்ப்பது, சுற்றுலா கைடு, பாதுகாப்பு மற்றும் பயணக் காப்பீடு உள்ளிட்ட அனைத்தும் இந்த பேக்கேஜில் அடங்கும்.
இந்தத் திட்டம் இந்திய அரசின் "தேகோ அப்னா தேஷ்" மற்றும் "ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்" முயற்சிகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துதல், கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் யாத்ரீகர்களை மத சுற்றுலாவில் ஈடுபடுத்துதல் ஆகியவை இதன் நோக்கமாகும். இதில் ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடம், சைவ உணவு, உள்ளூர் போக்குவரத்து, சுற்றிப் பார்ப்பது, பாதுகாப்பு, காப்பீடு மற்றும் IRCTC இன் சிறப்பு விருந்தோம்பல் ஆகியவை அடங்கும்.