... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#பெண்களின் பிறப்பு முதல் பட்டப்படிப்பு வரை நிதியுதவி: உ.பி. அரசு தீவிர பரிசீலனை

பெண்களின் பிறப்பு முதல் பட்டப்படிப்பு வரை நிதியுதவி: உ.பி. அரசு தீவிர பரிசீலனை

புதுடெல்லி: பெண்களின் பிறப்பு முதல் பட்டப்படிப்பு வரை நிதி உதவி செய்ய உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டு வருவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 8) உத்தர பிரதேச முதல்வர் யோகி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்காக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களின் கல்வியை ஆதரிக்க பிறப்பு முதல் பட்டப்படிப்பு வரை விரிவான நிதி உதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகள்கள் இனி யாரையும் சார்ந்திருக்க மாட்டார்கள்.

பிறப்பு முதல் பட்டப்படிப்பு வரை, அவர்களின் கல்வியை ஆதரிக்க அரசாங்கம் ஒரு தொகுப்பை வழங்கும். அதிகார பூர்வ பிறப்பு பதிவு முறையில் ஒரு பெண் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்டவுடன், பிறந்த உடனேயே நிதி உதவி தொடங்கும். பெண் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டவுடன், குழந்தையின் பிறப்புக்குத் தேவையான தொகை நேரடியாக அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். பெண் குழந்தைக்குத் தேவையான அனைத்து தடுப்பூசிகளும் வழங்கப்படுவதையும் உறுதி செய்யும். பெண் கல்வியின் பல்வேறு நிலைகளில் உத்தரப் பிரதேச அரசின் நிதியுதவி பட்டப்படிப்பு வரைத் தொடரும்.

தற்போது, உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெண்களுக்கு மொத்தம் ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், சுமார் 2.7 மில்லியன் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கான மாநில அரசின் திருமணத் திட்டமும் உள்ளது. இதில், தகுதி வாய்ந்த பயனாளிகளின் திருமணத்திற்கு உ.பி அரசு, ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் மகளின் திருமணச் செலவு குறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும், பெண்களுக்காக ’லட்சுமி பாய் ஸ்கூட்டி திட்டம்’ அமலாக்கப்பட உள்ளது. இதன் கீழ், இரண்டு சக்கர ஸ்கூட்டர்களை விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்தில், தகுதி வாய்ந்த மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும், இரண்டாம் கட்டத்தில் இந்த திட்டம் மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பாரம்பரியம், தொழில் நுட்பம், வெளிப்படைத் தன்மை, நம்பிக்கை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மாற்றம் என பிரதமர் மோடியால் ஊக்குவிக்கப்பட்ட ஐந்து கொள்கைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் டிஜிட்டல் தொழில் முனைவோர் மையங்களை நிறுவ மாநில அரசு முடிவு செய்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். தங்கள் வீடுகளில் இருந்து வெளியே உள்ள நகரங்களில் வேலை செய்பவர்களுக்கு பணிபுரியும் பெண்கள் விடுதிகளையும் அரசு நிறுவி வருகிறது. இவை, தற்போது வாரணாசி, மீரட், பிரயாக் ராஜ், கோரக்பூர், கான்பூர், ஜான்சி மற்றும் ஆக்ராவில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், இதே போன்ற விடுதிகள் அயோத்தி, பரேலி, அலிகர், மிர்சாபூர், சஹரன்பூர் மற்றும் மொராதாபாத் ஆகிய இடங்களிலும் கட்டப்படும்.” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News