... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#ஈரானின் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா நியமனம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

ஈரானின் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா நியமனம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

டெஹ்ரான்: ஈ​ரானின் புதிய உச்ச தலை​வ​ராக அயத்​துல்லா அலி காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்ரேல் கடந்த 28-ம் தேதி நடத்​திய தாக்​குதலில் ஈரான் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்​துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இதையடுத்து, புதிய தலை​வரை தேர்வு செய்​யும் பணி​யில் 88 மத குருக்​கள் அடங்​கிய சபை ஈடு​பட்​டது. இந்த சபை ஓட்​டெடுப்பு மூலம் மறைந்த தலை​வர் அயத்​துல்லா காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனியை 3-வது உச்ச தலை​வ​ராக தேர்வு செய்​தது. இனிமேல் ஈரானின் அனைத்து விஷ​யங்​களி​லும் மோஜ்தபா காமேனி முடி​வெடுப்​பார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் ஈரான் தலை​வர் நியமனத்​தில் அமெரிக்​கா​வின் ஒப்​புதல் இருக்க வேண்​டும். இல்​லாவிட்டால் அவர் நீண்ட காலம் இருக்க முடி​யாது’’ என கூறி​யிருந்தார். ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் படைகள் நடத்​திய தாக்​குதலில் இது​வரை 1,332 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ஆயிரக்​கணக்​கானோர் காயம் அடைந்​துள்​ளனர். ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பக்​கர்காலிபவ் நிபந்​தனை​யின்​றிசரணடைய வேண்​டும் என ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

ஆனால், ‘‘ஈரான் சண்டை நிறுத்​தம் கோர​வில்​லை, தாக்​குதல் நடத்​தி​ய​வர்​களை தண்​டிக்​கும்’’ என முகமது பக்​கர் கூறி​யுள்​ளார். ஈரானின் மூத்த தலை​வர்​களை எல்​லாம் குறி​வைத்து இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. சமீபத்​தில் ராணுவத் தலை​வ​ராக அறிவிக்​கப்​பட்ட அபால்​காசிம் பபையன் கடந்த சனிக்கிழமை நடந்த தாக்​குதலில் கொல்​லப்​பட்​டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்க கடற்​படை​க்கு சொந்தமான விமானம் தாங்கி கப்​பல்​களின் இருப்​பிடம் மற்​றும் அந்​நாட்டு ராணுவம் எங்​கிருந்து தாக்​கு​கிறது என்பது போன்ற முக்கிய உளவுத் தகவல்​களை ஈரானுக்கு ரஷ்யா வழங்​கு​வ​தாக கூறப்​படு​கிறது.

ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து:

இந்த சூழலில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்​தபாவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துச் செய்​தி அனுப்​பி​யுள்ளார். ‘ஈரான் போரை சந்​திக்​கும் நேரத்​தில், உயர் பதவிக்கு வந்​துள்ள உங்​களுக்கு அதிக தைரிய​மும், அர்ப்​பணிப்​பும் தேவை என்​ப​தில் சந்​தேகம் இல்​லை. ஈரான் மற்​றும் எங்​களது ஈரான் நண்​பர்​களுக்கு ரஷ்​யா​வின் முழு ஆதரவு உள்​ளது’ என்று புதின் அதில் குறிப்​பிட்​டுள்​ளார்​.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News