புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டி
234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்.9-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் 23-ந்தேதி வரை நடக்கிறது. கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக த.வெ.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலும் த.வெ.க. தனித்து போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட த.வெ.க. முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் போட்டியிடும் 30 தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியலும் தயாராகி உள்ளதாகவும் இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.