... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை: தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை: தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்குப் பதிவு நடை​பெறும் ஏப்​.23-ம் தேதி அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு பொது விடு​முறை விட வேண்​டும் என்று தமிழக அரசுக்​கு, தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வைக்​கான தேர்தல் வாக்​குப்​ப​திவு வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. இந்த தேர்​தலில் 2.90 கோடி பெண், 2.78 கோடி ஆண், 7,656 திருநங்​கைகள் என மொத்​தம் 5.69 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர்.

இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு, பொதுத்​துறை மற்​றும் தனி​யார் நிறு​வனங்​கள், அனைத்து கல்வி நிறு​வனங்​கள், தொழிற்​சாலைகள் ஆகிய​வற்​றுக்கு ஏப்​.23-ம் தேதி சம்​பளத்துடன் கூடிய பொது விடுமுறை விட வேண்​டும். தொழிலா​ளர் பணி​யாற்​றும் தொகு​தி​யில் தேர்தல் நடை​பெறா​விட்​டாலும், தேர்தல் நடை​பெறும் தொகு​தி​யில், அந்த தொழிலாளி வாக்​காள​ராக இருந்​தால் அவர்​களுக்கு சம்​பளத்​துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்​டும். தினக்​கூலி தொழிலாள​ராக இருந்​தா​லும் விடுப்பு அளிக்க வேண்​டும் என்று தமிழக அரசுக்​கு, இந்​திய தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி ​உள்​ளது.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News