அ.தி.மு.க.வின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்ளுக்கான 2ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (27.03.2026) வெளியிட்டுள்ளார். அதன்படி, கும்மிடிப்பூண்டி தொகுதியில். V. சுதாகரும், பொன்னேரி (தனி) தொகுதியில் . சிறுணியம் பலராமனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், திருத்தணி தொகுதியில் க திருத்தணி கோ. அரியும், திருவள்ளூர் தொகுதியில் ரமணாவும் போட்டியிடுகின்றனர்.
மேலும் இந்தப் பட்டியலில் மாதவரம் தொகுதிக்கு மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதிக்கு கே. குப்பன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதிக்கு முன்னாள் க. பழனி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் தொகுதியில் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் மற்றும் செங்கல்பட்டு தொகுதியில் எம். கஜா (எ) கஜேந்திரன் ஆகியோர் களம் காண்கின்றனர். செய்யூர் (தனி) தொகுதியில் இ. இராஜசேகர், மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமாரவேல் மற்றும் காஞ்சிபுரம் தொகுதியில் வி. சோமசுந்தரம் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அரக்கோணம் (தனி) தொகுதிக்கு சு. ரவி மற்றும் காட்பாடி தொகுதிக்கு வி. ராமு ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆற்காடு தொகுதியில் எஸ்.எம். சுகுமார், வேலூர் தொகுதியில் எஸ்.ஆர்.கே. அப்பு, அணைக்கட்டு தொகுதியில் த. வேலகன் மற்றும் குடியாத்தம் (தனி) தொகுதியில் ஜி. பரிதா புருஷோத்தமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி தொகுதிக்கு ஜி. செந்தில்குமார் மற்றும் ஆம்பூர் தொகுதிக்கு ஆர். வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஊத்தங்கரை (தனி) தொகுதியில் டி.எம். தமிழ்செல்வம் களம் காண்கிறார். பர்கூர் தொகுதியில் இ.சி. கோவிந்தராசன் மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில் கே. அசோக்குமார் போட்டியிடுகின்றனர். ஓசூர் தொகுதியில் பி. பாலகிருஷ்ண ரெட்டியும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மரகதம் வெற்றிவேலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அரூர் (தனி) தொகுதிக்கு வி. சம்பத்குமார் மற்றும் செங்கம் (தனி) தொகுதிக்கு டி.எஸ். வேலு ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் எஸ். இராமச்சந்திரன் மற்றும் ஆரணி தொகுதியில் எல். ஜெயசுதா போட்டியிடுகின்றனர். செய்யார் தொகுதியில் முக்கூர் என். சுப்பிரமணியன் மற்றும் வந்தவாசி (தனி) தொகுதியில் பி. ராணி ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். திண்டிவனம் (தனி) தொகுதியில் பி. அர்ஜூனன் மற்றும் வானூர் (தனி) தொகுதியில் பி. முருகன் ஆகியோர் வேட்பாளர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.