குரூப் 1 தேர்வர்களே அலர்ட்! நேர்காணல் தேதியை அறிவித்த டிஎன்பிஎஸ்சி.. நோட் பண்ணுங்க
TNPSC Group 1 Exam Latest Update: குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நேர்காணல் தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
NPSC Group 1 Exam Latest Update: தமிழக அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. அரசு துறையில் உள்ள பெரும்பாலான பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என பல்வேறு பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பணியிடங்களை டிஎன்பஎஸ்சி நிரப்பி வருகிறது.
குரூப் 1 தேர்வு அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதாவது, குரூப் 1 தேர்வுகளுக்கான நேர்காணல் தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 1 தேர்வு மூலம் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், உதவி ஆணையர் (தொழிலாளர்துறை) ஆகிய பதிவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் 1 நேர்காணல் தேதி அறிவிப்பு இந்த நிலையில், குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. அதாவது, டிசம்பர் மாதம் நடந்த குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை நேற்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும், நேர்காணல் தேதியையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி | பதவிகள்)-இல் உள்ள பதவிகளின் நேரடி நியமனத்திற்காக 01.04.2025 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தெரிவிற்கான முதன்மைத் தேர்வுகள் 01.12.2025 முதல் 04.12.2025 வரை நடைபெற்றது. இத்தேர்விற்கு 1,801 தேர்வர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேற்படி தேர்வினை 1,568 தேர்வர்கள் எழுதினர்.
மேற்கண்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, மூலச் சான்றிதழ் (Physical Certificate Verification and Interview) 160 தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் (www.tnpsc.gov.in) 30.03.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு 15.04.2026 மற்றும் 16.04.2026 ஆகிய நாட்களில் நடைபெறும். தேர்வர்கள், இது தொடர்பாக தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.