... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
திருச்செந்தூர் பக்தர்களுக்கு இதுவரை கிடைக்காத வசதிகள்..!

திருச்செந்தூர் பக்தர்களுக்கு இதுவரை கிடைக்காத வசதிகள்..!

திருச்செந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கை

* திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, தலைவன்வடலி, புன்னக்காயல், முத்தையாபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய இரயில் போக்குவரத்து அமைத்து தருவேன். * தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் முதல் சென்னைக்கு தினந்தோறும் வந்தே பாரத் இரயில் சேவையும், இரயில்வே மேம்பாலமும் கொண்டு வருவேன்.

* தொகுதியில் டாக்டர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் அரசு தொழில் நுட்பக்கல்லூரி, இலவச IAS, IPS, TNPSC அகடாமி அமைத்து தருவேன். * தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு மத்திய அரசின் நவோதயா பள்ளியை நிறுவி அதில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* திருச்செந்தூர் முருகன் கோவில் வழிப்பாதையை சீரமைத்து நவீன பாதாள சாக்கடைத் திட்டத்தை மேம்படுத்தி, வருகை தரும் பக்தர்களுக்கு அதிக தங்கும் விடுதிகளை உருவாக்கி 24 மணி நேர குடிநீர் சேவையை பெற்றுத் தருவேன். * திருச்செந்தூர் நகரில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிகின்ற அளவில் நவீன Multi-Speaciality Upgrade W அமைக்கப்படும்.

* நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலமும், பட்டா இல்லாத இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுப்பேன். * தொகுதிக்குட்பட்ட மெஞ்ஞானபுரம், உடன்குடி, பரமன்குறிச்சி, நாசரேத், தென்திருப்பேரை, குரும்பூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேர மொபைல் ஆம்புலன்ஸ் சேவை செய்து தருவேன். * தொகுதி முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடிநீர் இணைப்பு வழங்கி, அதில் தினந்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்குவேன். ஒவ்வொரு வீட்டின் மின் இணைப்புடன் மத்திய அரசு திட்டத்தின் மானிய சூரிய ஒளி இணைப்பு ஏற்படுத்தி மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். * திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் விரைவு தரிசனம் செய்யவும், கோவில் வளாகத்தில் திருமணம் செய்யவும் MLA Pass வழங்குவேன். நவீன கார் பார்க்கிங் வசதி செய்து தருவேன் * தொகுதிகுட்பட்ட முக்கிய பேருந்து நிறுத்தங்களில் குளிர்சாதன வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்டுகள் கட்டித் தருவேன்.

Source : Smacy News

1 hour ago

Home Flash News