Select Location
All Locations
State
Region
City / District
சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி - ஹைலைட்ஸ் பார்வை

சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி - ஹைலைட்ஸ் பார்வை

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்​கத்தா அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே பீல்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் தொடர்ச்​சி​யாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்​தி​னார் சஞ்சு சாம்​சன். இந்த ஓவரில் 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. கேமரூன் கிரீன் வீசிய 2-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் ஒரு பவுண்​டரி விரட்ட 10 ரன்கள் சேர்க்​கப்​பட்​டன.

மறு​புறம் நிதான​மாக விளை​யாடிய கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 6 பந்​துகளில், 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் அனுகுல் ராய் சுழற்​பந்து வீச்​சில் ஸ்வீப் ஷாட் விளையாடிய போது டீப் விக்​கெட் திசை​யில் நின்ற ரோவ்மன் பவலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்​கெட்​டுக்கு ருது​ராஜ் கெய்க்​வாட், சஞ்சு சாம்​சன் ஜோடி 2.2 ஓவர்​களில் 25 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஆயுஷ் மாத்ரே மட்​டையை சுழற்​றி​னார். கேமரூன் கிரீன் வீசிய 4-வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே தலா 2 பவுண்​டரி, 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். இந்த ஓவரில் 21 ரன்​கள் விளாசப்​பட்​டன. ஆயுஷ் மாத்​ரே​வின் அதிரடி​யால் சிஎஸ்கே அணி 4 ஓவர்​களில் 52 ரன்​கள் குவித்​தது. அனுகுல்ராய் வீசிய 5-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் சிக்​ஸர் விளாசி​னார். வைபவ் அரோரா வீசிய 6-வது ஓவரில் முதல் 3 பந்துகளை​யும் ஆயுஷ் மாத்ரே பவுண்​டரிக்கு விரட்​டி​னார். ஆனால் இதே ஓவரின் கடைசி பந்தை அரோரா ஷாட் பாலாக வீச அதை ஆயுஷ் மாத்ரே டீப் மிட்விக்​கெட் திசையில் விளாசிய போது ரமன்​தீப் சிங்​கிடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து ரமன்​தீப் சிங், ரோவ்​மன் பவலுடன் இணைந்தார். ஜேமி ஓவர்​டன் வீசிய 14-வது ஓவரில் ரோவ்மன் பவல் சிக்​ஸர் விளாசி​னார். கடைசி 4 ஓவர்​களில் கொல்​கத்தா அணி​யின் வெற்​றிக்கு 73 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. கலீல் அகமது வீசிய 17-வது ஓவரில் 2 பவுண்டரிகளு​டன் 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 18-வது ஓவரில் 7 ரன்​களை மட்​டுமே விட்டுக்​கொடுத்​தார். கடைசி 2 ஓவர்​களில் கொல்​கத்தா அணி​யின் வெற்​றிக்கு 55 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வானது. ஜேமி ஓவர்​டன் வீசிய 19-வது ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. கடைசி ஓவரில் 45 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. இது சாத்​தி​யம் இல்லை என்​ப​தால் சிஎஸ்கே அணி நிம்​மதி பெரு​மூச்சு விட்டது. அன்​ஷுல் கம்​போஜ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்கு அடுத்த ரமன்​தீப் சிங் 3-வது பந்​தில் சர்​ப​ராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். ரமன்​தீப் சிங் 23 பந்​துகளில், 35 ரன்​கள் சேர்த்​தார். 20 ஓவர்கள் முடி​வில் கொல்​கத்தா அணி 7 விக்​கெட்​கள் இழப்புக்கு 160 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. ரோவ்மன் பவல் 22 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்​களும், அனுகுல் ராய் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். சிஎஸ்கே அணி தரப்​பில் நூர் அகமது 3 விக்​கெட்​களை​யும், அன்​ஷுல் கம்​போஜ் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். அகீல் ஹோசைன், கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்றினர். 32 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 8-வது இடத்​துக்கு முன்னேறியது. அதேவேளை​யில் கொல்​கத்தா அணிக்கு இது 4-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி நடப்பு சீசனில் இது​வரை ஒரு வெற்​றிகூட பெற​வில்​லை. 5 ஆட்டங்களில் விளை​யாடி உள்ள கொல்​கத்தா அணி ஒரு புள்​ளி​யுடன்​ கடைசி இடத்​தில்​ உள்​ளது.


Malaimalar 1 hour ago
Home Flash News