Select Location
All Locations
State
Region
City / District
சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி - ஹைலைட்ஸ் பார்வை

சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி - ஹைலைட்ஸ் பார்வை

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்​கத்தா அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே பீல்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் தொடர்ச்​சி​யாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்​தி​னார் சஞ்சு சாம்​சன். இந்த ஓவரில் 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. கேமரூன் கிரீன் வீசிய 2-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் ஒரு பவுண்​டரி விரட்ட 10 ரன்கள் சேர்க்​கப்​பட்​டன.

மறு​புறம் நிதான​மாக விளை​யாடிய கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 6 பந்​துகளில், 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் அனுகுல் ராய் சுழற்​பந்து வீச்​சில் ஸ்வீப் ஷாட் விளையாடிய போது டீப் விக்​கெட் திசை​யில் நின்ற ரோவ்மன் பவலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்​கெட்​டுக்கு ருது​ராஜ் கெய்க்​வாட், சஞ்சு சாம்​சன் ஜோடி 2.2 ஓவர்​களில் 25 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஆயுஷ் மாத்ரே மட்​டையை சுழற்​றி​னார். கேமரூன் கிரீன் வீசிய 4-வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே தலா 2 பவுண்​டரி, 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். இந்த ஓவரில் 21 ரன்​கள் விளாசப்​பட்​டன. ஆயுஷ் மாத்​ரே​வின் அதிரடி​யால் சிஎஸ்கே அணி 4 ஓவர்​களில் 52 ரன்​கள் குவித்​தது. அனுகுல்ராய் வீசிய 5-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் சிக்​ஸர் விளாசி​னார். வைபவ் அரோரா வீசிய 6-வது ஓவரில் முதல் 3 பந்துகளை​யும் ஆயுஷ் மாத்ரே பவுண்​டரிக்கு விரட்​டி​னார். ஆனால் இதே ஓவரின் கடைசி பந்தை அரோரா ஷாட் பாலாக வீச அதை ஆயுஷ் மாத்ரே டீப் மிட்விக்​கெட் திசையில் விளாசிய போது ரமன்​தீப் சிங்​கிடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து களமிறங்​கிய சர்ஃப​ராஸ் கான், கார்த்​திக் தியாகி வீசிய பந்​தில் டீப் பாயின்ட் திசை​யில் பவுண்​டரி அடித்​தார். 13-வது ஓவரை வீசிய சுனில் நரேன் வெறும் 3 ரன்​களை மட்​டுமே வழங்​கி​னார். வருண் சக்​ர​வர்த்தி வீசிய அடுத்த ஓவரில் சர்ஃப​ராஸ் கான் ஒரு சிக்​ஸரை​யும், டெவால்ட் பிரே​விஸ் 2 பவுண்​டரி​களை​யும் அடித்​தனர். அனுகுல் ராய் வீசிய அடுத்த ஓவரில் 6 ரன்​கள் மட்​டுமே சேர்க்​கப்​பட்​டன. வைபவ் அரோரா வீசிய 16-வது ஓவரில் டெவால்ட் பிரே​விஸ் தலா ஒரு சிக்​ஸரும் பவுண்​டரியும் விரட்ட, சர்ஃப​ராஸ் கான் பேக்​வேர்டு ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸர் ஒன்றை பறக்கவிட்டார். இந்த ஓவரில் 20 ரன்​கள் விளாசப்​பட்​டன. சீராக ரன்​கள் சேர்த்த சஃர்​ப​ராஸ் கான் 18 பந்​துகளில், 2 சிக்ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 23 ரன்​கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்​தில் போல்​டா​னார். 4-வது விக்கெட்​டுக்கு சர்ஃப​ராஸ் கான், டெவால்ட் பிரே​விஸ் ஜோடி 29 பந்​துகளில் 51 ரன்​கள் சேர்த்​தது.


Malaimalar 1 hour ago
Home Flash News