Select Location
All Locations
State
Region
City / District
ஐபிஎல் 2026: சிஎஸ்கே-விற்குப் பேரிடி: நட்சத்திர வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்!

ஐபிஎல் 2026: சிஎஸ்கே-விற்குப் பேரிடி: நட்சத்திர வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் மற்றுமொரு சோதனையாக, இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆயுஷ் மத்ரே தொடை நரம்பு காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.Long Distance Bus & Rail

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, இரண்டாவது ரன் எடுக்க முயன்ற மத்ரேவிற்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. மைதானத்திலேயே பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் அவர் வெளியேறிய நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது காயம் தீவிரமானது என்பது உறுதியானது. இந்த காயம் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் என்பதால், அவர் இந்த சீசனில் விளையாட வாய்ப்பில்லை என சிஎஸ்கே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் ஏற்கனவே தடுமாறி வரும் சென்னை அணிக்கு, மத்ரேவின் விலகல் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி, பின்னர் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்தாலும், கடந்த போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இக்கட்டான இச்சூழ்நிலையில், அணியின் டாப் ஸ்கோரராகத் திகழ்ந்த மத்ரே விலகியிருப்பது பெரும் இழப்பாகும். அவர் இதுவரை 177.87 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் இரண்டு அரைசதங்களை விளாசி அணியின் நம்பிக்கையாக இருந்து வந்தார்.

ஏற்கனவே சென்னை அணி வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது சில நாட்களுக்கு முன்பு விலகிய நிலையில், தொடர் தொடங்குவதற்கு முன்பே நேதன் எல்லிஸையும் அணி இழந்திருந்தது. மேலும், டெவால்ட் பிரெவிஸ் ஆரம்பப் போட்டிகளில் விளையாடவில்லை. இத்தகைய சூழலில், இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத மூத்த வீரர் எம்.எஸ். தோனி, தனது உடற்தகுதிக்கு உட்பட்டு மீண்டும் ஆடும் லெவனில் இணைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அடுத்த பலப்பரிட்சையை ஏப்ரல் 23 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ளது.


Dinakaran 7 days ago
Home Flash News