Select Location
All Locations
State
Region
City / District
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலம்

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலம்

கள்ளக்குறிச்சி: கூ​வாகம் கூத்​தாண்​ட​வர் கோயில் சித்​திரை திரு​விழாவையொட்டி திருநங்​கைகள் கோயில் பூசா​ரி​யிடம் தாலி கட்​டிக் கொள்ளும் வைபவம் நேற்று நடந்தது. கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்டை அருகே கூவாகம் கிராமத்​தில் உலகப் பு​கழ்பெற்ற கூத்​தாண்ட​வர் கோயில் உள்​ளது. இக்கோயி​லில் இந்த ஆண்டு சித்​திரை திரு​விழா கடந்த 11-ம் தேதி சாகை வார்த்​தல் நிகழ்ச்​சியுடன் தொடங்​கியது.

தொடர்ந்து 15-ம் தேதி மகா​பாரதம் சொற்​பொழிவும், 16-ல் சந்​துனு சரிதம், 17-ல் பீஷ்மர் பிறப்​பு, 18-ம் தேதி தாமர் பிறப்பு, 22-ல் கூத்​தாண்​ட​வர் பிறப்பு உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளும் நடை​பெற்​றன. இந்த விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சுவாமி திருக்​கண் திறத்​தல் மற்​றும் திருநங்​கைகள் அரவானுக்கு தாலி கட்​டிக்​கொள்​ளும் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில் ஆயிரக்​கணக்​கான திருநங்​கைகள் மணமகள் கோலத்​தில் கோயிலுக்கு வந்​தனர். பின்​னர் மஞ்​சள் கயிறுடன் கோயிலுக்​குள் சென்று கூத்​தாண்​ட​வர் முன்​னிலை​யில் அரவானை தங்​களின் கணவனாகப் பாவித்​து, தாலி கட்​டிக் கொண்​டனர். இதையடுத்து கும்​மி​, நடன​மாடி மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். இன்று தேரோட்டம் நடக்கிறது. அதைத்​தொடர்ந்து அரவான் களப்​பலி மற்​றும் திருநங்கைகள் விதவைக் கோலம் பூணும் நிகழ்​வும் விடை​யாற்றி உற்​சவமும் நடை​பெறும். இதையொட்டி 700 போலீஸார் பாது​காப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை அறநிலை​யத் ​துறை, கிராமத்தினர் செய்துள்ளனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News