Select Location
All Locations
State
Region
City / District
10-வது முறை வெற்றி பெற்ற திரிணமூல் காங். நிர்வாகி

10-வது முறை வெற்றி பெற்ற திரிணமூல் காங். நிர்வாகி

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப் பேர​வைத் தேர்​தலில் 207 தொகு​தி​களில் பாஜக வெற்றி பெற்று ஆட்​சி​யமைக்​க​வுள்​ளது. ஆளும்​ கட்​சி​யான திரிண​மூல் காங்​கிரஸ் 80 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளது. இந்​நிலை​யில் திரிண​மூல் கட்​சி​யைச் சேர்ந்த 82 வயதான சோபன்​தேவ் சட்​டோ​பாத்​யாயா 10-வது முறை​யாக வெற்​றி​பெற்று எம்​எல்​ஏ​வாகி சாதனை படைத்​துள்​ளார். அவர் பாலேகஞ்ச் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு 61,476 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் பாஜக வேட்​பாளரைத் தோற்​கடித்​தார். 1998-ல் மம்தா பானர்​ஜி, திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைத் தொடங்​கியது முதல் கட்​சி​யின் நிர்​வாகி​யாக நீடித்து வரு​கிறார் சோபன்​தேவ். மேலும் சட்​டப் பேர​வை​யின் முதலா​வது திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வும் இவர்​தான். 1998-ல் நடந்த சட்​டப் பேரவை இடைத்​தேர்​தலில் சோபன்​தேவ் வெற்றி பெற்றார்.

அதற்கு முன்பு காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்​த அவர் 1991-ல் தேர்தலில் காங்​கிரஸ் சார்​பில் வெற்றி பெற்று முதன்​முறை​யாக எம்​எல்​ஏ​வாகத் தேர்​வா​னார். அப்​போது முதல் 2026 வரை 10 தேர்தல்​களில் வெற்​றி​பெற்று எம்​எல்​ஏ​வாகி சாதனை படைத்துள்ளார். இது குறித்து சோபன்​தேவ் சட்​டோ ​பாத்​யாயா கூறும்​போது, “முதல்வர் மம்​தாவுடன் இணைந்து செயல்​பட்டு கட்​சியை வளர்த்தவன் நான். சுமார் 13 ஆண்​டு​கள், இடது​ சா​ரி​களின் ஆட்சி நடந்​த​போது எதிர்க்​கட்சி எம்​எல்​ஏ​வாக குரல் கொடுத்​தேன். பாஜகவை எதிர்த்து தொடர்ந்து அரசி​யல் செய்​வோம்” என்​றார்.


Hindu Tamil 36 minutes ago
Home Flash News