Select Location
All Locations
State
Region
City / District
‘விஜய் பதவியேற்பு விழாவில் தமிழை பின்னுக்கு தள்ளியிருப்பது ஏற்புடையது அல்ல’ - அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு

‘விஜய் பதவியேற்பு விழாவில் தமிழை பின்னுக்கு தள்ளியிருப்பது ஏற்புடையது அல்ல’ - அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு

சென்னை: ​முதல்​வர் விஜய்​யின் பதவி​யேற்பு விழா​வில், தமிழை பின்​னுக்கு தள்​ளி​யிருப்​பது ஏற்​புடையது அல்ல என திமுக, விசிக, கம்​யூனிஸ்ட் உள்ளிட்ட கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறியிருப்பதாவது: தி​முக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி: மாற்​றம் என்று கூறிக்​கொண்டு தமிழுக்கு முக்​கி​யத்​து​வம் தராமல் இருப்​பது அழிவுப் பாதைக்கு கொண்டு செல்​லும். முன்​னாள் முதல்வர்கள் எம்​ஜிஆர், ஜெயலலி​தா, கருணாநிதி காலத்​தி​லும்​கூட இவ்​வாறான செயல் நடை​பெற​வில்​லை. தற்​போதைய ஆட்​சி​யின் மூலம் தமிழ்​மொழி பின்​னுக்கு தள்​ளப்​பட்​டு, தமிழ்த்​தாய் வாழ்த்து போன்று தமிழக​மும் மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​படும்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: முதல்​வர் பதவி​யேற்பு நிகழ்​வில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்​கி, தமிழ்த்​தாய் வாழ்த்து பாடலை மூன்​றாம் நிலை​யில் வைத்​தது மரபு மீறிய செய​லாகும். இந்த தவறுக்கு காரண​மானவர்​கள் யாராக இருந்​தா​லும் கண்​டனத்​துக்​குரியது. இந்த தவறு மீண்​டும் தொடரக்​கூ​டாது. மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்முகம்: முதல்​வர் விஜய்​யின் பதவி​யேற்பு நிகழ்ச்​சி​யில் முதலில் வந்தே மாதரம் பாடப்​பட்​டது, பெரும்​பாலான மக்​களால் புரிந்​து​கொள்ள முடி​யாமல் இருந்​தது. மேலும், இரண்​டாவ​தாக தேசிய கீத​மும், மூன்​றாவ​தாக தமிழ்த்​தாய் வாழ்த்​தும் பாடப்​பட்​டது. இது ஏற்​புடையதல்ல. எனவே, அரசு நிகழ்ச்​சிகளில் ஏற்​கெனவே கடைபிடிக்​கப்​பட்டு வரும் நடை​முறை​கள் பின்​பற்​றப்​படு​வதை தமிழக அரசு உத்​தர​வாதப்​படுத்த வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீரபாண்டியன்: தமிழக அரசு விழாக்​களில் தொடக்​கத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடு​வது தான் இது​வரை கடைபிடித்து வரும் மரபு. ஆனால் முதல்​வரின் பதவி​யேற்பு விழா​வில், வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்​கி, தமிழை மூன்​றாம் நிலை​யில் வைத்​தது மரபை மீறிய செய​லாகும். இந்த தவறுக்கு காரண​மானவர்​கள் யார் என்​பதை தமிழக அரசு விளக்க வேண்​டும். திக தலை​வர் கி.வீரமணி: முதல்​வர் பதவி​யேற்பு விழா​வில் தமிழ்த்​தாய் வாழ்த்து மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டிருப்​பதை பார்த்​து, தமிழ் உணர்​வாளர்​களின் நெஞ்சு கொ​திக்​கிறது. இது​போன்ற அவலங்​கள் மீண்​டும் தொட​ராது இருக்க முதல்​வர் வழி​வகை காண வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பதவி​யேற்பு விழா​வில் நீண்​ட​கால மரபு மீறப்​பட்​டுள்​ளது அதிர்ச்​சி​அளிக்​கிறது. ‘வந்தே மாதரம்’ பாடலை முதலா​வ​தாக​வும், தேசிய கீதத்தை இரண்​டாவ​தாக​வும் இசைத்த பின்​னரே தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டுள்​ளது. இது அதி​காரி​களின் கவனக்​குறை​வா அல்​லது ஆளுநரை மகிழ்விக்​கச் செய்​யப்​பட்​ட​தா என்​ப​தற்கு முதல்​வர் விளக்​கமளிக்க வேண்​டும்​. தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன்: முதல்​வரின் பதவி​யேற்பு நிகழ்ச்​சி​யில், தமிழ்த்​தாய் வாழ்த்து மூன்​றாவது இடத்​துக்கு தள்​ளப்​பட்ட சம்​பவம், ஒட்​டுமொத்த தமிழர் உணர்​வு​களை​யும் காயப்​படுத்​தி​யுள்​ளது. அரசு நிகழ்​வு​களில் தமிழுக்கு முதலிடம் வழங்​கப்பட வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்​. தமிழ்த்​தாய் வாழ்த்து கடைசி​யாக பாடப்​பட்​ட​தில் உடன்​பாடு இல்லை: அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா விளக்கம் தமி்ழ்த்​தாய் வாழ்த்து கடைசி​யாக பாடப்​பட்​ட​தில் தவெக​வுக்​கும் உடன்​பாடு இல்லை என்​றும், இனி வரும் காலங்​களில் இது​போல நடை​பெறாது என்​றும் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா விளக்​கம் அளித்​துள்​ளார்.


Hindu Tamil 52 minutes ago
Home Flash News