தமிழ்நாடு பேரவைத் தலைவராகிறார் ஜே.சி.டி. பிரபாகர்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா பதவியேற்றார்.
இன்று காலை தொடங்கிய தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எம்.எல்.ஏ.வாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சியினருக்கு பெரும்பான்மை இல்லாததால் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.