உத்சவ் 2026 விழாவில் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா' விருது
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற உத்சவ் 2026 விழாவில் நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பாலக்காட்டில் உள்ள பல்லாஸனா பழையகாவு ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரவி மோகன் மற்றும் கெனிஷா கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவிற்கு ரவி மோகன் ஆற்றிய பங்களிப்பு, ரசிகர்களிடையே பெற்றிருக்கும் வரவேற்பு மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகையும் வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட ரவி மோகன், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, கெனிஷாவுடன் இணைந்து “கண்மணி அன்போடு காதலன்” பாடலை மேடையில் பாடி ரசிகர்களை கவர்ந்தார். மேலும், மேடைக்கு செல்லும் முன் கெனிஷா, ரவி மோகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.